ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து, லக்சயா சென்

காலிறுதியில் பி.வி.சிந்து டென்மார்க்கின் அமலி ஷூல்ஸை எதிர்கொள்கிறார்.
பி.வி.சிந்து, லக்சயா சென்
Published on: 

சார்ப்ரூக்கன்,

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்சயா சென் மற்றும் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

லக்சயா சென்

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சகநாட்டு வீரர் கிரண் ஜார்ஜை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-15, 18-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

முதல் செட்டை கைப்பற்றிய லக்சயா சென்னுக்கு, 2-வது செட்டில் கிரண் ஜார்ஜ் கடும் சவால் அளித்து வெற்றி பெற்றார். இதனால் ஆட்டம் 3-வது செட்டுக்கு சென்றது. இதில் சிறப்பாக விளையாடிய லக்சயா சென் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

காலிறுதியில் அவர் பின்லாந்து வீரர் காலே கோல்ஜோனனை எதிர்கொள்கிறார்.

பி.வி.சிந்து

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, பிரான்ஸ் வீராங்கனை ரோஸி ஒக்டாவியா பன்கசாரியை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் அவர் டென்மார்க்கின் அமலி ஷூல்ஸை எதிர்கொள்கிறார்.

X