ஹைலோ ஓபன்: இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்சயா சென்

அன்மோல் கர்ப்பை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பி.வி.சிந்து, லக்சயா சென்
Published on: 

சார்ப்ரூக்கன்,

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் லக்சயா சென் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதியில் அபார வெற்றி

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், பிரான்ஸ் வீரர் தோமா ஜூனியர் பபோவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய லக்சயா சென், 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

ஜோனத்தன் கிறிஸ்டியுடன் மோதல்

மற்றொரு அரையிறுதியில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சன், இந்தோனேசியாவின் ஜோனத்தன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் ஆன்டன்சன் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதால் ஜோனத்தன் கிறிஸ்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதனால் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் லக்சயா சென், ஜோனத்தன் கிறிஸ்டியை எதிர்கொள்கிறார்.

பி.வி.சிந்து

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சக வீராங்கனை அன்மோல் கர்ப்பை 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இதனால் ஹைலோ ஓபன் தொடரின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனை இருவரும் இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ளனர்.

X