தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்

மொத்தம் 15 பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.
தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு  ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்
Published on: 

மாற்றுத் திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் சமீபத்தில் நடந்தது. இதில் இந் தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற 13 பேரில், 9 வீரர், வீராங்கனைகள் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்க லம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.

ரூ.6.85 கோடி ஊக்கத்தொகை

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கு தல் மற்றும் முதல்-அமைச்சர் கோப்பை மாநில விளையாட்டு நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங் கில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற 9 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.6.85 கோடியை ஊக்கத் தொகையாக வழங்கினார். இதன்படி பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதிக்கு (ஒரு தங்கம், 2 வெள்ளி) ரூ.1% கோடியும், பேட்மிண்டன் வீரர் நவீ னுக்கு (ஒரு தங்கம், ஒரு வெண்கலம்) ரூ.1.05 கோடியும், நீளம் தாண்டுதல் வீரர் சோலைராஜூக்கு ரூ.75 லட்சமும், பேட்மிண்டன் வீராங்கனை நித்யஸ்ரீக்கு ரூ.80 லட்சமும், பேட்மிண்டன் வீரர் சிவராஜனுக்கு ரூ.50 லட்சமும். வலுதூக்கு தல் வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ.50 லட்சமும், பேட்மிண்டன் வீராங்கனைகள் மனிஷாவுக்கு ரூ.60 லட்ச மும், டேபிள் டென்னிஸ் வீராங்கனை பேபி சஹானாவுக்கு ரூ.30 லட்சமும், டேபிள் டென்னிஸ் வீரர் மதனுக்கு ரூ.60 லட்சமும் ஊக்கத்தொகையாக கிடைத்தது.

உதவித் தொகை

அத்துடன் முதல்-அமைச்சர் கோப்பை மாநில விளையாட்டு போட்டியில் முறையே முதல் 3 இடங்களை பிடித்த சென்னை. செங்கல்பட்டு, கோவை மாவட்ட அணிகளுக்கு பரிசுக் கோப்பையை வழங்கினார். மாவட்ட கலெக்டர் தலைமையில் அந்தந்த அணியினர் கோப்பையை பெற்றுக் கொண்டனர்.

மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிகள், சிறப்பு நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளின் தனிப்பட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.500-ம், முதன்மை விளை யாட்டு மைய விடுதிகளில் பயிற்சி பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000-ம் என 2,600 வீரர், வீராங் கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.77 கோடி ரூபாய் வழங்கும் விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித் தொகை திட் டத்தை தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் ரூ.42.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமியையும், சேலம் மாவட்டம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் ரூ.20 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கத்தையும் காணொலி மூலம் முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

X