

லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழம் பெருமை வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை மற்றும் ஒற்றையர் பிரிவில் சாம்பியனுக்கான பரிசுத் தொகை ஆகியவை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக போட்டியை நடத்தும் ஆல் இங்கிலாந்து கிளப் அறிவித்துள்ளது.
வீரர்களின் கோரிக்கையை ஏற்று இதுவரை இல்லாத வகையில் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மொத்த பரிசுத் தொகை ரூ.820 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.46 கோடி பரிசுத் தொகையாக கிடைக்கும்.