காமன்வெல்த் போட்டி: பதக்கங்களை தட்டிச்சென்ற இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா-யஷ்வீர் சிங்

மேடையில், தேசிய கீதம் கேட்பது என்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்க கூடிய விசயம்.
காமன்வெல்த் போட்டி:  பதக்கங்களை தட்டிச்சென்ற இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா-யஷ்வீர் சிங்
Published on

கிளாஸ்கோ

காமன்வெல்த் போட்டியின் தடகள போட்டியில், இந்திய வீரர்கள் இருவர் பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளனர்.

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகின்றன. இதில் தடகள போட்டியில், இந்திய வீரர்கள் இருவர் பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளனர். ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற, இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கமும், யஷ்வீர் சிங் வெண்கல பதக்கமும் வென்று மேடையை பகிர்ந்து கொண்டனர்.

ஆசிய போட்டி

போட்டியில், இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா தங்க பதக்கம் வென்றார். பதக்கம் பெற்ற பின்னர் பேட்டியளித்த நீரஜ் சோப்ரா, ஆசிய போட்டிகளில் நடந்த சம்பவங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. அப்போது நானும், சவுரவும் பதக்கங்களை வென்றிருந்தோம். மேடையை ஒன்றாக பகிர்ந்து கொண்டோம்.

அதேபோன்றதொரு நிகழ்வு மீண்டும் வந்துள்ளது. இதுபோன்ற முக்கிய போட்டியில், யஷ்வீர் சிங் சிறந்த முறையில் விளையாடி உள்ளது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேடையில், தேசிய கீதம் கேட்பது என்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்க கூடிய விசயம். நான் மீண்டும் சிறந்த முறையில் முன்னேறி வந்திருக்கிறேன். இன்னும் நிறைய போட்டிகள் வரவிருக்கின்றன. இதனால், நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com