ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம்... ஈட்டி எறிதலில் வரலாறு படைத்த இந்திய வீரர்கள்

சுமித் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.
ஆசிய பாரா விளையாட்டு
Published on: 

ஐச்சி-நகோயா,

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்று அசத்தினர். சுமித் தங்கப் பதக்கத்தையும், மகேந்திர குர்ஜார் வெள்ளிப் பதக்கத்தையும், சந்தீப் சஞ்சய் சர்கார் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

72.46 மீட்டர் தூரம்

ஆண்களுக்கான எப்42–எப்44/எப்61–எப்64 பிரிவில் போட்டியிட்ட சுமித், 72.46 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 1,112 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.

வெள்ளி, வெண்கலம்

இந்தப் போட்டியில் இந்தியாவின் மகேந்திர குர்ஜார் 59.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, 1,066 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரரான சந்தீப் சஞ்சய் சர்கார் 64.48 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, 1,006 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

இதன் மூலம் இந்தப் போட்டியில் இந்திய வீரர்களே முதல் மூன்று இடங்களையும் பிடித்து, பதக்க மேடையை முழுமையாக ஆக்கிரமித்தனர்.

முந்தைய போட்டியிலும் தங்கம்

கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளிலும் சுமித் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது மீண்டும் தங்கம் வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com