உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமையை பெற்ற இந்தியா

உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் நாடு குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.
உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமையை பெற்ற இந்தியா
Published on

புதுடெல்லி,

உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 22-வது உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் உள்ள டோருல் இன்று முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் போலந்தில் நேற்று நடந்த உலக தடகள கவுன்சில் கூட்டத்தில் அடுத்த உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் நாடு குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.

இதில் 2028-ஆண்டுக்கான உலக உள்ளரங்க தடகள சாம் பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த தகவலை உலக தடகள சம்மேளனத்தின் துணைத் தலைவரும், இந்திய தடகள சம்மேளன தலைவருமான அடில் சமரிவல்லா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com