இளையோர் ஒலிம்பிக்: இரு தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்தியா

இளையோர் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
இளையோர் ஒலிம்பிக்: இரு தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்தியா
Published on: 

தாகர்,

4-வது இளையோர் ஒலிம்பிக் போட்டி ஆப்பிரிக்க நாடான செனகலில் நடந்து வருகிறது.

இந்திய வீரர்

இதில் குத்துச்சண்டையில் ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரி வில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அம்பேகர் மீதேய் 3-2 என்ற கணக்கில் அயர்லாந்தின் கிறிஸ்டியன் ஜூபானியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதன் மூலம் மணிப்பூரை சேர்ந்த அம்பேகர் மீதேய். இளையோர் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக்கில் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீரர் ஷிவ தபா வெள்ளிப்பதக்கம் வென்றதே சிறந்த செயல்பாடாக இருந்தது.

இந்திய வீராங்கனை

தொடர்ந்து பெண்கள் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை குஞ்சன் 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் அல்ஜீரியாவின் பவுதைனா பென்ச லாவுடன் கோதாவில் குதித்தார். இதில் குஞ்சன் 5-0 என்ற கணக்கில் பென்ச லாவை பதம் பார்த்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டியில் மகுடம் சூடிய முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.

X