உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் நிகாத் ஜரீன் தங்கம் வென்று சாதனை...!

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது.
உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் நிகாத் ஜரீன் தங்கம் வென்று சாதனை...!
Published on

டெல்லி,

13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், 50 கிலோ பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில், இந்தியாவின் நிகாத் ஜரீன் வியட்நாமின் நுகுயங் தை டம்மை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் நிகாத் ஜரீன் வியட்நாம் நுகயங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று சாதனைபடைத்தார்.

இதன் மூலம் நடப்பு உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்துள்ளது. முன்னதாக நேற்று நடந்த போட்டியில் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் நிது கங்காசும், 81 கிலோ பிரிவில் ஸ்வீட்டி போராவும் தங்கம் வென்று சாதனைபடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com