சாதனை படைத்த இந்தியா - உலக ஜூனியர் ஸ்குவாஷில் தொடர்ந்து 2-வது முறையாக வெண்கலம் வென்று அசத்தல்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் அமெரிக்க அணியை இந்தியா எதிர்கொண்டது.
 உலக ஜூனியர் ஸ்குவாஷ்
Published on

கெய்ரோ,

உலக ஜூனியர் ஸ்குவாஷ் அணி சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆண்கள் அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவிடம் தோல்வி

உலக ஜூனியர் ஸ்குவாஷ் அணி சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் அமெரிக்க அணியை எதிர்கொண்ட இந்தியா, 0-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்தியா, வெண்கல பதக்கத்தை வென்றது.

தொடர்ச்சியாக 2 பதக்கங்கள்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் வரலாற்றில், இந்திய ஆண்கள் அணி தொடர்ச்சியாக இரண்டு தொடர்களில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

பெண்கள் பிரிவில், இந்திய அணி காலிறுதியில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இதனால் பெண்கள் அணியால் பதக்கம் வெல்ல முடியவில்லை.

இறுதிப்போட்டியில் அமெரிக்கா - எகிப்து

இந்த தொடரின் ஆடவர் இறுதிப்போட்டியில் அமெரிக்கா மற்றும் நடப்பு சாம்பியனான எகிப்து அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் பிரான்ஸ் அணியை வீழ்த்திய எகிப்து, மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க களமிறங்குகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com