உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் இந்திய வம்சாவளி வீரர்கள்

இந்திய வம்சாவளியினர் 4 வீரர்கள் உலகக் கோப்பை போட்டியில் கால்பதிக்கிறார்கள்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் இந்திய வம்சாவளி வீரர்கள்
Published on

நியூயார்க்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி வருகிற 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதில் 48 அணிகள் பங் கேற்கின்றன.உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்தியா ஒருபோதும் தகுதி பெற்றதில்லை என்றாலும் இந்த முறை இந்திய வம்சாவளியினர் 4 வீரர்கள் உலகக் கோப்பை போட்டியில் கால்பதிக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணியில் 25 வயதான நிஷான் வேலுப்பிள்ளை என்ற வீரர் இடம் பெற்றிருக்கிறார். இவர் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 3 கோல் அடித்துள்ளார்.

கத்தார் அணியில் அங்கம் வகிக்கும் 19 வயதான தசின் முகமது ஜாஷித்தின் பெற்றோர் கேரளாவை சேர்ந் தவர்கள். முகமது ஜாஷித், கத்தார் அணிக்காக இரு போட்டியில் ஆடியிருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு தேர்வாகியிருக்கும் நடுகள வீரர் சர்பிரீத்சிங்கின் குடும்பம் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தவர்கள்.

ஆப்பிரிக்க நாடான காங்கோ அணியை தமிழக வம்சாவளி வீரர் சாமுவேல் மோட்டுசமி அலங்கரிக்கிறார். பின்கள வீரராக வலம் வரும் மோட்டுசமி 57 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com