சர்வதேச பேட்மிண்டன் - ஜப்பான் வீராங்கனைக்கு ஷாக் கொடுத்த இந்தியாவின் தன்வி... அரைஇறுதிக்கு முன்னேற்றம்

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தன்வி, வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
சர்வதேச பேட்மிண்டன் - ஜப்பான் வீராங்கனைக்கு ஷாக் கொடுத்த இந்தியாவின் தன்வி... அரைஇறுதிக்கு முன்னேற்றம்
Published on

ஓர்லியான்ஸ்,

பிரான்சில் நடைபெற்று வரும் ஓர்லியான்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் கால்இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள 17 வயதான தன்வி ஷர்மா, ஜப்பானின் 23-ம் நிலை வீராங்கனை நட்சுகி நிடாய்ராவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தன்வி, 21-14, 21-14 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

Also Read
உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமையை பெற்ற இந்தியா
சர்வதேச பேட்மிண்டன் - ஜப்பான் வீராங்கனைக்கு ஷாக் கொடுத்த இந்தியாவின் தன்வி... அரைஇறுதிக்கு முன்னேற்றம்

மற்றொரு பக்கம், ஆண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் ஹரிகரன் அம் சகருணன் - எம்.ஆர். அர்ஜுன் ஜோடி, இந்தோனேசியாவின் லியோ கார்னான்டோ - பகாஸ் மவுலானா இணையை எதிர்கொண்டது. கடுமையாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 12-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com