

கிளாஸ்கோ,
கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இந்த தொடரில் இந்திய குத்துச்சண்டை அணி வரலாற்று சாதனையை படைத்தது. ஒரே காமன்வெல்த் தொடரில் 7 தங்கம் மற்றும் 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்று புதிய மைல்கல்லை எட்டியது.
பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு, மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
தடகளத்தில் இந்திய வீரர்கள் பல முக்கிய சாதனைகளை நிகழ்த்தினர். குல்வீர் சிங், ஒரே காமன்வெல்த் தொடரில் டிராக் பிரிவில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல் தேஜஸ்வின் சங்கர், காமன்வெல்த் டெகாத்லான் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார்.
தங்கம் (7):
பிரீதி பவார் (54 கிலோ)
ஜெயிஸ்மின் லம்போரியா (57 கிலோ)
சாக்சி சவுத்ரி (51 கிலோ)
பிரியா கங்காஸ் (60 கிலோ)
அருந்ததி சவுத்ரி (70 கிலோ)
சச்சின் சிவக் (60 கிலோ)
அங்குஷ் பங்கால் (80 கிலோ)
வெள்ளி (3):
ஜடுமணி சிங் (55 கிலோ)
லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ)
நரேந்தர் பெர்வால் (+90 கிலோ)
மீராபாய் சானு (48 கிலோ)
ரிஷிகாந்த் சிங்
முத்துப்பாண்டி ராஜா
ஞானேஸ்வரி யாதவ்
வல்லூரி அஜய் பாபு
ஹர்ஜிந்தர் கவுர்
லவ்ப்ரீத் சிங்
பிந்த்யாராணி தேவி
ஷர்மிளா தங்கர்
திலீப் காவித்
சோமன் ராணா
சர்வேஷ் குஷாரே
குல்வீர் சிங் (10,000 மீ)
முரளி ஸ்ரீசங்கர்
முகமது பாசில்
நீரஜ் சோப்ரா
பிரவீன் சித்ரவேல்
சுபம் ஜூயல்
ஷில்பா கே. ஷைலா
சீமா கலிராம்னா
தேஜஸ்வின் சங்கர்
யாஷ் வீர் சிங்
செல்வா பிரபு
குல்வீர் சிங் (5,000 மீ)
அஸ்மிதா டே (மகளிர் -48 கிலோ), ஹர்ஷ் சிங் (ஆடவர் -60 கிலோ).
யாமினி மவுர்யா (மகளிர் -57 கிலோ).
உன்னதி சர்மா (மகளிர் -63 கிலோ).
ஜான்டு குமார் (ஆடவர் ஹெவிவெயிட்).
மொத்தம் 39 பதக்கங்களுடன் (13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம்) இந்தியா 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. குறிப்பாக குத்துச்சண்டை, தடகளம் மற்றும் பளுதூக்குதல் பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெளிப்படுத்திய ஆதிக்கம், இந்திய விளையாட்டின் வளர்ச்சியை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.