இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வருகிறது.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

ஜகர்த்தா,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நேற்று தொடங்கியது. மொத்தம் ரூ.10 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேயின் வென் சி ஹூவுடன் மோதினார். இந்த போட்டியில் பி.வி. சிந்து 15-21, 21-15, 14-21 என்ற செட் கணக்கில் வென் சி ஹூவிடம் தோற்று வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப்பை 21-18, 21-6 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டனான் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com