இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்; முதல் சுற்றிலேயே வெளியேறிய ஆகர்ஷி காஷ்யப்

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜகர்த்தா,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நேற்று தொடங்கியது. மொத்தம் ரூ.10 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் 21-18, 21-6 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்பை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் ஆகர்ஷி காஷ்யப் முதல் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com