இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் தோல்வி கண்ட இந்திய வீரர்

இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சிங்கப்பூரின் லோ கீன் யூ உடன் மோதினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜகர்த்தா,

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சிங்கப்பூரின் லோ கீன் யூ உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோ கீன் யூ 22-20, 21-9 என்ற செட் கணக்கில் கிரண் ஜார்ஜை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டங்களில் பிரனாய் மற்றும் லக்சயா சென் ஆகியோர் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com