இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி - காயத்ரி இணை வெற்றி

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜகர்த்தா,

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை, உக்ரைனின் போலினோ புரோவா-யெவ்ஹினியா கன்டிம் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை 21-14, 22-20 என்ற நேர்செட்டில் உக்ரைனின் போலினோ புரோவா-யெவ்ஹினியா கன்டிம் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com