நீளம் தாண்டுதல் போட்டி - 22 ஆண்டுகால சாதனையை தகர்த்த கேரள வீராங்கனை

இதன் மூலம் அவர் ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆன்சி சோஜன்
Published on

புவனேஸ்வர்,

நீளம் தாண்டுதல் போட்டியில் கேரள வீராங்கனை ஆன்சி சோஜன் சாதனை படைத்துள்ளார்.

ஆசிய போட்டிக்கு தகுதி

மாநிலங்களுக்கு இடையிலான 65-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் கேரள வீராங்கனை ஆன்சி சோஜன் 6.88 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் அவர் ஆசிய போட்டிக்கும் தகுதி பெற்றார்.

சாதனை முறியடிப்பு

இதற்கு முன்பு, 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அஞ்சு ஜார்ஜ் 6.83 மீட்டர் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது. 22 ஆண்டுகளாக நீடித்த அந்த சாதனையை தற்போது ஆன்சி சோஜன் முறியடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com