சர்வதேச செஸ் போட்டி: தமிழக வீரர் சாம்பியன்

22 சர்வதேச மாஸ்டர்கள் உள்பட 142 வீரர்கள் பங்கேற்றனர்.


சர்வதேச செஸ் போட்டி: தமிழக வீரர் சாம்பியன்
Published on

சென்னை,

6-வது லா பிளாக்னே ஓபன் சர்வதேச செஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்தது. இதில் 20 நாடுகளை சேர்ந்த 13 கிராண்ட்மாஸ்டர்கள், 22 சர்வதேச மாஸ்டர்கள் உள்பட 142 வீரர்கள் பங்கேற்றனர்.

9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி யில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் இனியன் 6 வெற்றி, 3 டிராவுடன் 7.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டில் இனியன் வென்ற 3-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com