சர்வதேச ஸ்குவாஷ் : அரைஇறுதியில் அனாஹத்

எகிப்தின் சல்மா ஹானியை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
சர்வதேச ஸ்குவாஷ் : அரைஇறுதியில் அனாஹத்
Published on: 

புதுடெல்லி,

சிலிக்கான் வேலி ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அமெரிக்காவின் ரெட்வுட் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண் கள் ஒற்றையர் கால்இறுதியில் உலக தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் 18 வயது இந்திய வீராங்கனை அனா ஹத் சிங் 4-11, 11-8, 4-11, 11-2, 11-5 என்ற செட் கணக்கில் 14-ம் நிலை வீராங்கனையான எகிப்தின் சல்மா ஹானியை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

புரொபசனல் ஸ்குவாஷ் சங்கத்தின் 'கோல்டு லெவல்' என்ற உயரிய நிலை போட்டியில் அனாஹத் சிங் அரைஇறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். அனாஹத் சிங் அடுத்து ஆசிய விளையாட்டு சாம்பியனும், உலக தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான சிவசங்கரியை (மலேசியா) எதிர் கொள்கிறார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com