சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: அரையிறுதியில் இந்திய வீராங்கனை சான்யா தோல்வி

பி.எஸ்.ஏ. சேலஞ்சர்ஸ் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது.
ஸ்குவாஷ்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளனம் சார்பில் பி.எஸ்.ஏ. சேலஞ்சர்ஸ் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சான்யா வாட்ஸ் 4-11, 2-11, 5-11 என்ற நேர்செட்டில் எகிப்தின் ரோக்யா ஒத்மேனிடம் தோற்று நடையை கட்டினார்.

மற்றொரு அரையிறுதியில் தென்கொரியா வீராங்கனை ஹவாயோங் 11-9, 9-11, 2-11, 11-4, 11-6 என்ற செட் கணக்கில் எகிப்து வீராங்கனை ஹனா அலாடினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் ஜோசிம் சுயா 8-11, 10-12, 11-5, 12-10, 12-10 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் முகமது சைபிக் கமாலை வெளியேற்றி இறுதிப் போட்டியை எட்டினார். இன்னொரு அரையிறுதியில் எகிப்து வீரர் ஆதம் ரோஷ்டி 12-10, 11-5, 11-7 என்ற நேர்செட்டில் சலா எல்டோர்க்மேனை (கனடா) விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்று பகல் 12 மணிக்கு இறுதிப்போட்டி நடக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com