10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் இளவேனில் வாலறிவன் வெண்கல பதக்கம்

சீனாவின் வாங் ஜிபெய் 252.7 புள்ளிகளுடன் தங்க பதக்கம் வென்றார்.
10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் இளவேனில் வாலறிவன் வெண்கல பதக்கம்
Published on

ஜெர்மனியில் மூனிச் நகரில் நடந்த போட்டியில் 10 மீ. ஏர் ரைபில் பிரிவில் இளவேனில் வாலறிவன் வெண்கல பதக்கம் வென்றார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் அவர், 231.2 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தார். சீனாவின் வாங் ஜிபெய் 252.7 புள்ளிகளுடன் தங்கமும், தென் கொரியாவின் குவோன் யுஞ்சி 252.6 புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றனர்.

இதனிடையே, ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் வருண் தோமர் 160.3 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்து ஏமாற்றத்தை சந்தித்தார். தகுதிச்சுற்றில் அவர் 585 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடிக்க, சரப்ஜோத் சிங் 9-ஆம் இடமும், நிஷாந்த் ராவந்த், அர்ஜுன் சிங் சீமா, ஆதித்யா மல்ரா ஆகியோர் முறையே 12, 20, 30-ஆவது இடங்களையும் பிடித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com