

இந்த ஆண்டுக்கான பார்முலா! கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 19-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி பந்தயம் மெச்சிகோ சிட்டியில் உள்ள ஓடுதளத்தில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறியது. 305.354 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி வழக்கம் போல் 11 அணிகளைச் சேர்ந்த 22 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.
இதில் முன்னாள் சாம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2 மணி 20 நிமிடம் 28.772 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று அதற்குரிய 25 புள்ளிகளை வசப்படுத்தினார். நடப்பு சீசனில் அவர் ருசித்த 3-வது வெற்றி இதுவாகும். அவரை விட 0.779 வினாடி மட்டுமே பின்தங்கிய 7 முறை சாம்பியனான இங்கி லாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (பெராரி அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். இத்தாலி வீரர் கிமி அன்டோனெல்லி (மெர்சிடஸ் அணி) 3-வது இடத்தை பிடித்து 15 புள்ளிகளை பெற்றார்.
19 சுற்று போட்டிகள் முடிவில் கிமி அன்டோனெல்லி 380 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். வெர்ஸ்டப்பென் 261 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஹாமில்டன் 259 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
மெக்சிகோ போட்டியில் டாப்-3 இடத்திற்குள் வந்ததன் மூலம் அன்டோனெல்லி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட் டத்தை உறுதி செய்தார். எஞ்சிய 4 பந்தயங்களில் அவர் முழுமையாக தோற்றாலும் அவரது முதலிடத்திற்கு ஆபத்து இல்லை. இதன் மூலம் 76 ஆண்டுகால பார்முலா1 கார்பந்தய வரலாற்றில் இந்த பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை 20 வயதான அன்டோனெல்லி பெற்றார். இதற்கு முன்பு ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 2010-ம் ஆண்டில் மகுடம் சூடியபோது அவரது வயது 23 ஆண்டு 133 நாட்களாக இருந்ததே இளம் வயது சாம்பிய னாக அறியப்பட்டார். அவரது 16 ஆண்டு கால சாதனையை அன்டோனெல்லி முறியடித்தார். மேலும் 1953-ம் ஆண் டுக்கு பிறகு பார்முலா1 மகுடத்தை உச்சிமுகர்ந்த முதல் இத்தாலி வீரர் என்ற மகத்தான சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
கடந்த ஆண்டு பார்முலா1 கார்பந்தயத்தில் அறிமுகம் ஆன அன்டோனெல்லி தனது 2-வது சீசனிலேயே சாம்பியனாக உருவெடுத்து விட்டார். இந்த ஆண்டில் நடந்துள்ள 19 சுற்று போட்டிகளில் 16-ல் அவர் டாப்-3 இடத்திற்குள் வந்தார். அவற்றில் 9-ல் வெற்றி கண்டிருந்தார்.