ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி தோல்வி

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டோக்கியோ,

மொத்தம் ரூ.8 கோடி பரிசுத்தொகைக்கான ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இதன் மகளிர் இரட்டையர் பிரிவில் முதலாவது சுற்றில் இந்தியாவின் ருதபர்னா பாண்டா- சுவேதா பர்னா பாண்டா ஜோடி, ஜப்பானின் இஷிகாவா- மைகோ கவாஜோ ஜோடியை எதிர்கொண்டு ஆடியது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் ருதபர்னா பாண்டா- சுவேதா பர்னா பாண்டா ஜோடி 13-21, 7-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் இஷிகாவா- மைகோ கவாஜோ ஜோடியிடம் தோல்வி கண்டு முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com