ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வி அடைந்தார்.
 Image Courtesy: @BAI_Media
 Image Courtesy: @BAI_Media
Published on

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென் இந்தோனேசிய வீரர் ஜொனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் 21-15, 13-21, 21-16 என்ற செட் கணக்கில் ஜொனாடன் கிறிஸ்டி, லக்சயா சென்னை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை லக்சயா சென் இழந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com