

குமாமோட்டோ,
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி குமாமோட்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றை யர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-19, 21-18 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சி யு ஜென்னை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சரிவில் இருந்து மீண்டு 18-21, 21-16, 24-22 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ரஸ்முஸ் ஜெம்கேவை வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார்.கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் துருவ் ராவத்- மனீஷா, ஹரிகரன் அம்சகருணன்-தனிஷா கிரஸ்டா ஜோடிகள் தோல்வி கண்டு வெளியேறின.