

குமாமோட்டோ,
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி குமாமோட்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றை யர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் 'நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-15, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் கோடை நரோகாவை (ஜப்பான்) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
5-வது முறையாக நரோகாவுடன் மோதிய ஸ்ரீகாந்த் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். கால்இறுதி யில் ஸ்ரீகாந்த். 15-ம் நிலை வீரரான கோகி வதனாபியை (ஜப்பான்) சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-8, 21-14 என்ற நேர்செட்டில் டாங் டிடன் யாவை (சீனா) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். அடுத்து ஜப்பானின் யுஷி தனகாவுடன் மோதுகிறார். பெண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி இணை 14-21, 14-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் ரின் இவாங்கா-கீ நகானிஷி ஜோடியிடம் தோற்று வெளியே றியது.