ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி; 2-வது சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்

காமன்வெல்த் போட்டிகளில் சாம்பியனான லக்சயா சென் மற்றும் பிரியன்ஷு ரஜாவத் ஆகியோர் முதல் சுற்று போட்டியில் தோற்றனர்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி; 2-வது சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்
Published on

குமமோட்டோ,

ஜப்பான் நாட்டின் குமமோட்டோ நகரில் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நேற்று தொடங்கின. வருகிற 19-ந்தேதி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இதில், ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றவரான இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த வீரர் லீ சியுக் யியு ஆகியோர் முதல் சுற்று போட்டி ஒன்றில் விளையாடினர்.

விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், முதல் செட்டை 22-20 என்ற புள்ளி கணக்கில் பிரனாய் கைப்பற்றினார். எனினும், அடுத்த செட்டை 19-21 என்ற புள்ளி கணக்கில் லீ கைப்பற்றினார்.

இதனால், இரண்டு பேரும் வெற்றியை பெறும் முனைப்பில் 3-வது செட்டில் விளையாடினர்.

இந்த போட்டியில், 21-17 என்ற புள்ளி கணக்கில் 3-வது செட்டை பிரனாய் தன்வசப்படுத்தி வெற்றி பெற்றார். இதனால், 2-வது சுற்று போட்டிக்கு பிரனாய் முன்னேறியுள்ளார்.

எனினும், காமன்வெல்த் போட்டிகளில் சாம்பியனான இந்திய வீரர் லக்சயா சென் மற்றும் பிரியன்ஷு ரஜாவத் ஆகியோர் முதல் சுற்று போட்டியில் தோற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com