

தோஹா
காமன்வெல்த் போட்டிகள் அடுத்த மாதம் 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 2-ந்தேதி வரை கிளாஸ்கோவில் நடைபெறுகின்றன. இந்த நிலையில் கத்தார் நாட்டின் தோஹா நகரில் ஈட்டி எறிதலுக்கான தோஹா டையமண்ட் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா (வயது 28) விளையாடினார். கடந்த 8 மாதங்களாக காயத்தில் அவதிப்பட்டு வந்த அவர், அதில் இருந்து மீண்டு வந்து விளையாடியுள்ளார். முதல் முயற்சியில் அவர் ஈட்டி வீசியதில் அது பவுல் (விதிமீறிய ஆட்டம்) ஆனது.
எனினும், 3-வது முயற்சியில் 85.69 மீட்டர்கள் தூரம் வீசி, 3-வது சுற்று முடிவில் 3-வது இடத்திற்கு முன்னேறினார். 4-வது சுற்றில் 83.45 மீட்டர்கள் தூரம் வீசினார். 5-வது சுற்றில் 86 மீட்டர்களுக்கும் கூடுதலான தொலைவுக்கு வீசினால், டாப் 3-ல் இடம் பிடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற கூடிய சூழல் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசத்தில், அவர் மற்றொரு பவுல் த்ரோ செய்ததில், போட்டியில் 4-வது இடத்திற்கு சென்றார்.
இந்த போட்டியில், காமன்வெல்த் போட்டிகளில் விளையாட இந்திய தடகள கூட்டமைப்பு நிர்ணயித்திருந்த, 82.61 மீட்டர் என்ற தகுதிக்கான தொலைவை கடந்து சோப்ரா ஈட்டி வீசினார். இதனால், வரவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் விளையாட அவர் தகுதி பெற்றுள்ளார்.