பளுதூக்குதலில் 73 கிலோ பிரிவை பிடிக்க மோதும் இரு இந்தியர்கள்

பளுதூக்குதலில் 73 கிலோ பிரிவை பிடிக்க மோதும் இரு இந்தியர்கள் ஜெரிமி லால்ரினுங்கா- அசிந்தா ஷெலி இடையே நேரடி போட்டி தொடங்கியுள்ளது.
பளுதூக்குதலில் 73 கிலோ பிரிவை பிடிக்க மோதும் இரு இந்தியர்கள்
Published on

2024-ம் ஆண்டு பாரீசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் 67 கிலோ எடைப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதனால் காமன்வெல்த் விளையாட்டில் இந்த பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஜெரிமி லால்ரினுங்கா, பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி பெற 73 கிலோ எடைப்பிரிவில் கவனம் செலுத்த உள்ளார். காமன்வெல்த் விளையாட்டில் 73 கிலோ பிரிவில் இந்தியாவின் அசிந்தா ஷெலி தங்கம் கைப்பற்றி இருந்தார். ஒலிம்பிக்கை பொறுத்தவரை ஒரு எடைப்பிரிவில் ஒரு நாட்டில் இருந்து ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எனவே 73 கிலோ எடைப்பிரிவுக்கான இடத்தை பிடிக்க லால்ரினுங்கா, அசிந்தா இடையே நேரடி போட்டி தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com