கொரிய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் காஷ்யப்

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதிக்கு காஷ்யப் தகுதி பெற்றார்.
கொரிய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் காஷ்யப்
Published on

இன்சியான்,

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்சியானில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப், டென்மார்க் வீரர் ஜன் ஜோர்ஜென்செனை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் காஷ்யப் 24-22, 21-8 என்ற நேர்செட்டில் ஜோர்ஜென்செனை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரைஇறுதியில் காஷ்யப், 2 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை சந்திக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com