குமாமோட்டோ மாஸ்டர்ஸ்: 2-வது சுற்றுக்கு முன்னேறிய லக்சயா சென்

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்-எம்.ஆர். அர்ஜுன் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
லக்சயா சென்
Published on: 

குமாமோட்டோ,

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் தொடரின் 2-வது சுற்றுக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறினார்.

வெற்றி

ஜப்பானில் நடைபெற்று வரும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் ஜப்பான் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென் , சீன தைபேயின் சீ யூ-ஜெனை எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய லக்சயா சென் 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்-எம்.ஆர். அர்ஜுன் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யிக் ஜோடிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய இணை 11-6 என முன்னிலையில் இருந்தபோது, காயம் காரணமாக மலேசிய ஜோடி போட்டியில் இருந்து விலகியது. இதனால் இந்திய ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பெண்கள் இரட்டையர் பிரிவு

பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-திரிஷா ஜாலி ஜோடி, ஜப்பானின் ஹினாடா சுசுகி-நாவோ யமகிதா ஜோடியை 21-17, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

X