ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் லக்‌சயா சென் சாம்பியன்

முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் ஜப்பானின் கோகி கைப்பற்றினார்.
ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் லக்‌சயா சென் சாம்பியன்
Published on: 

டோக்கியோ,

ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜப்பான் மாஸ்டர்ஸ்

ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடர் குமாமோட்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் லக்சயா சென் ஜப்பானின் கோகி வதனாபி மோதினர்.

பரபரப்பாக நடந்த இப்போட்டியின் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் ஜப்பானின் கோகி கைப்பற்றினார். இதனை தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்சயா சென் அடுத்த 2 செட்களையும் 21-18, 21-14 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

லக்சயா சென் சாம்பிய

இதன் மூலம் ஜப்பான் வீரர் கோகி வதனாபியை 21-13, 21-18, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சர்வதேச போட்டியில் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெருமையை லக்சயா சென் படைத்துள்ளார். முன்னதாக இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரிலும் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X