நீச்சல் போட்டியில் தேசிய சாதனை படைத்த நடிகர் மாதவன் மகன்..!

புவனேஸ்வரில் நடைபெற்ற நேஷனர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.
நீச்சல் போட்டியில் தேசிய சாதனை படைத்த நடிகர் மாதவன் மகன்..!
Published on

புவனேஸ்வர்:

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரராக உள்ளார். அவர் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் புவனேஸ்வரில் நடைபெறும் 48-வது ஜீனியர் நேஷனர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார். இப்போட்டியில் அவர் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.

கலிங்கா அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:01.73 விநாடிகளில் தூரத்தை கடந்து தங்கம் வென்றார் வேதாந்த். இதற்கு முன்பு இதே போன்ற 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:06.43 என இருந்த தேசிய சாதனையை தற்போது அவர் முறியடித்துள்ளார்.

இப்போட்டியில் அவர் மராட்டியத்தின் சார்பில் பங்கேற்றார். வேதாந்தின் இந்த வெற்றியை மாதவன் டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் போட்டியின் காணொலியையும் பகிர்ந்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com