

மாட்ரிட்,
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வரு கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரஷியாவின் டேனில் மெட்வி டேவ் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் புட்கோவ் கிஜாரை (நார்வே) வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார்.
பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-7 (1-7), 6-3, 6-2 என்ற செட்டில் நவோமி ஒசாகாவை (ஜப்பான்) போராடி வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.