மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இன்று தொடக்கம்

சிந்து தனது முதலாவது சுற்றில் டென்மார்க்கின் லினே கிறிஸ்டோபெர்சனை எதிர்கொள்கிறார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கோலாலம்பூர்,

மலேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது. இந்திய தரப்பில் முன்னாள் உலக சாம்பியனான பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனாய், ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள்.

சிந்து தனது முதலாவது சுற்றில் டென்மார்க்கின் லினே கிறிஸ்டோபெர்சனை எதிர்கொள்கிறார். பிரனாய் முதல் சவாலை சீனத்தைபேயின் சோவ் டைன் சென்னுடன் தொடங்குகிறார்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com