மலேசியா ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்..!

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஶ்ரீகாந்த் கிடாம்பி, ஹாங்காங் வீரர் அங்குசிடம் தோல்வியடைந்தார்.
சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி (image courtesy: BAI Media)
சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி (image courtesy: BAI Media)
Published on

கோலாலம்பூர்,

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஶ்ரீகாந்த் கிடாம்பி, ஹாங்காங் வீரர் அங்குஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் ஶ்ரீகாந்த் 13-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, பிரான்சின் ரோனன் லாபர் - லூகாஸ் கோர்வி ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி 21-11, 21-18 என்ற செட் கணக்கில் ரோனன் - லூகாஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com