மலேசியா ஓபன் பேட்மிண்டன்; முதல் சுற்றில் இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் தோல்வி..!

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது.
மலேசியா ஓபன் பேட்மிண்டன்; முதல் சுற்றில் இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் தோல்வி..!
Published on

கோலாலம்பூர்,

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வீரர், வீராங்கனைகள் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் தரவரிசையில் டாப்-16 இடங்களுக்குள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். இதனால் இனி வரும் சர்வதேச போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் சீனாவின் ஜாங் யிமான் உடன் மோதினார். இதில் ஜாங் யிமான் 21-15, 21-15 என்ற செட் கணக்கில் ஆகர்ஷி காஷ்யபை வீழ்த்தினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com