மலேசிய ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி - காயத்ரி இணை 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. இந்த தொடர் வரும் 12-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.12 கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டு உள்ளனர்.

இந்நிலையில், இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை, தாய்லாந்தின் ஓர்னிச்சா ஜோங்சதா போர்ன்பார்ன்- சுகித்தா சுவாச்சாய் இணையுடன் மோதியது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை 21-10, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com