ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை தகுதி

இந்த தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார்.
Image Courtesy: PTI 
Image Courtesy: PTI 
Published on

பாங்காங்,

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்தின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சென் சூ-யு-வை எதிர் கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மணிகா 4-3 (8-11, 11-9, 11-6, 11-6, 9-11, 8-11, 11-9 செட் கணக்கு ) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்,

இதன் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார்.

அரையிறுதி போட்டியில் கொரியாவின் ஜியோன் ஜிஹீ மற்றும் ஜப்பானின் மிமா இடோ இடையேயான போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனையை மணிகா சந்திக்கவுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com