டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மானிகா, சத்யன் முன்னேற்றம்

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மானிகா, சத்யன் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மானிகா, சத்யன் முன்னேற்றம்
Published on

புதுடெல்லி,

சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்திய வீராங்கனை மானிகா பத்ரா 2 இடங்கள் முன்னேறி 53-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். டாப்-100 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்திய வீராங்கனை அவர் தான்.

காமன்வெல்த் விளையாட்டில் 3 பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த சத்யன் ஒரு இடம் ஏற்றம் கண்டு, தனது சிறந்த தரவரிசையாக 35-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு தமிழக வீரர் சரத்கமல் 31-வது இடத்தில் நீடிக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com