காயம் காரணமாக காமன்வெல்த் தகுதி சுற்று போட்டியில் இருந்து மேரிகோம் பாதியில் விலகல்..!

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் 6 முறை உலக சாம்பியனான மேரி கோம், அரியானாவின் நிதுவை சந்தித்தார். முதல் ரவுண்டில் 39 வயதான மேரிகோம் எதிராளிக்கு குத்துவிட முயற்சித்த போது, நிலை தடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு இடது கால்முட்டியில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போட்டியை நடுவர் நிறுத்தினார்.

உடனடியாக மேரிகோம் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை எதிர்த்து மோதிய நிது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டிக்கு இந்த முறை மேரி கோம் செல்ல முடியாது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com