

சென்னை,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்க னையும், நடப்பு சாம்பியனுமான அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கேத்தரின் மெக்நாலியை (அமெரிக்கா) தோற்க டித்து 4-வது சுற்றை எட்டினார்.
ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 28-ம் நிலை வீராங்கனையான மார்டா கோஸ்ட் யுக்கை (உக்ரைன்) வீழ்த்தினார்.