மில்கா சிங் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

மில்கா சிங் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
மில்கா சிங் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி பிரதமர் மோடி நலம் விசாரித்தார்
Published on

சண்டிகார்,

ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரும், பிரபல முன்னாள் ஓட்டப்பந்தய வீரருமான 91 வயது மில்கா சிங் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொகாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவரது உடல் நிலை சீரானதை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகாரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை முன்பை விட நன்றாகவும், நிலையாகவும் இருப்பதாக சண்டிகார் அரசு மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் பேராசிரியர் அசோக் குமார் தெரிவித்தார். இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று டெலிபோன் மூலம் மில்காசிங்கை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். இதற்காக பிரதமருக்கு மில்கா சிங்கின் மகன் ஜீவ் மில்காசிங் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com