

சென்னை,
41-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. போட் டியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார். எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, தலைமை செயல் அதிகாரி மயில்வாகனன், தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டி.கே.ராஜேந்திரன், செயலாளர் சிவகு மார் உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
இதில் பெண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அபிநயா ராஜரா ஜன் (11.49 வினாடி) முதலிடம் பிடித்தார். இவர் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக் கம் வென்றவர் ஆவார். குஜராத் வீராங்கனை காஜல் வஜா (11.69 வினாடி) 2-வது இடமும், அரியானா வீராங்கனை நான்சி (11.83 வினாடி) 3-வது இடமும் பெற்றனர். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை மிருத்திகா (11.71 வினாடி) சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
ஆண்களுக்கான 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் நீல் சாம்ராஜ் (10.45 வினாடி) வெற்றி பெற்றார்.