தேசிய ஓபன் தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கனிமொழி தங்கம் வென்றார்

தேசிய ஓபன் தடகள போட்டியின், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கனிமொழி தங்கம் வென்றார்.
தேசிய ஓபன் தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கனிமொழி தங்கம் வென்றார்
Published on

ராஞ்சி,

59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ரெயில்வே வீராங்கனை சி.கனிமொழி 14.05 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். தமிழக வீராங்கனை ஆர்.நித்யா 14.15 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு ரெயில்வே வீராங்கனை எலிசபெத் அன்டோ 14.24 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர். தங்கப்பதக்கம் வென்ற கனிமொழி சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com