

வதோதரா,
72-வது தேசிய சீனியர் கபடி போட்டி வதோதராவில் நடந்து வருகிறது. பங் கேற்றுள்ள 29 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதன் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது 2-வது ஆட்டத் தில் விதர்பாவுடன் மோதியது.
இதில் தமிழக அணி 40-21 என்ற புள்ளி கணக்கில் விதர்பாவை தோற்கடித்து 2-வது வெற்றியை சுவைத்தது. சதீஷ் கண்ணன், தீபக் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.