நியூ சவுத் வேல்ஸ் ஓபன் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் தமிழக வீராங்கனை போராடி தோல்வி

இறுதிப்போட்டியில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன், இமான் ஷகீனை எதிர்கொண்டார்.
நியூ சவுத் வேல்ஸ் ஓபன் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் தமிழக வீராங்கனை போராடி தோல்வி
Published on

சிட்னி,

நியூ சவுத் வேல்ஸ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன், கனடாவின் இமான் ஷகீனை எதிர்கொண்டார்.

இதில் முதல் 2 செட்டுகளை ஷகீன் கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்டுகளை ராதிகா கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 5-வது செட்டை ஷகீன் கைப்பற்றி வெற்றி பெற்றார். 61 நிமிடங்கள் போராடிய ராதிகா 8-11, 3-11, 11-4, 12-10 மற்றும் 10-21 என்ற செட் கணக்கில் தோற்று கோப்பையை நழுவ விட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com