உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்று அசத்தல்...!

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்றார்.
உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்று அசத்தல்...!
Published on

டெல்லி,

13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், 48 கிலோ பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில், இந்திய வீராங்கனை நிது கங்காஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட்கை எதிர்கொண்டார்.

போட்டி துவங்கியது முதலே நிது கங்காஸ் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 5-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் நிது கங்காஸ் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

48 கிலோ எடைப்பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற நிது கங்காஸ்க்கு பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com