நார்வே செஸ்: அர்ஜுன் எரிகைசியை வீழ்த்தி 2-வது இடத்திற்கு முன்னேறிய குகேஷ்

image courtesy:twitter/@NorwayChess
7-வது சுற்று முடிவில் பாபியானோ கருனா 12.5 புள்ளிகளுடன் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஸ்டாவஞ்சர்,
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், சக நாட்டவரான அர்ஜூன் எரிகைசி உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குகேஷ், எரிகைசியை வீழ்த்தினார். இந்த தொடரில் இதற்கு முன்னர் இவ்விரு வீரர்களும் மோதிய ஆட்டத்தில் எரிகைசி வீழ்த்தியிருந்தார். அந்த தோல்விக்கு தற்போது குகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் கூடுதலாக புள்ளிகள் பெற்ற குகேஷ் 11.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
7-வது சுற்று முடிவில் பாபியானோ கருனா 12.5 புள்ளிகளுடன் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கார்ல்சென் 11 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அர்ஜுன் எரிகைசி 7.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.






